2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கல் வேண்டும்.
இரண்டு வார காலத்துக்குள் தீர்வு இல்லாது விடின் முன்னறிவித்தல் இன்றி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு வரவு– செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கப்பட்டுள்ளார்.
இதனால் 1.5 மில்லியன் அரச ஊழியர்களும் அவர்களை சார்ந்துள்ள 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகவேண்டியுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 4 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் செலவாக 58 ஆயிரம் காணப்படுகிறது.
தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் வாரத்துள் கவனம் செலுத்தாவிடின் எந்தவித முன்னறிவித்தலுமின்றி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேருமென அவர்கள் அறிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment