School van L
இலங்கைசெய்திகள்

கோரிக்கை நிறைவேற்றினால் கட்டணம் குறையும்!

Share

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை  பாடசாலை  போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் தமக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

42 மற்றும் 59 ஆசனங்களைக் கொண்ட பஸ்களை, கிடைக்கும் எரிபொருள் கோட்டாவின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு சேவையில் ஈடுபடுத்த முடியாது என சுட்டிக்காட்டினார்.

குறைந்தபட்ச எரிபொருளாக வேன்களுக்கு 40 லீற்றரும் பஸ்களுக்கு 100 லீற்றரும் வழங்கப்பட வேண்டும் என அவர் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த அவர், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில் கட்டணம் குறைக்கப்படும் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...