Sukirthan
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் டக்ளஸூக்கு எதிராகப் போராடுவோம்!

Share

வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட மீனவர்களால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் நேரடியாக வருகை தந்து சில உறுதிமொழிகளை அளித்து இந்தப் போராட்டத்தினை நிறுத்தியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

மீனவர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை கடற்றொழில் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.

ஆனால் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...