ஆளுநர் நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது- என்ன நடக்கிறது?

Sivajilingam 1

வடக்கு மாகாண ஆளுநரின் சலுகைகள் குறித்த நாங்கள் பேசுவோம். எதற்காக இவ்வளவு ஆளணி. நீங்கள் போய் கொழும்பில் இருந்து பாருங்கள். ஆளுநர் வெட்டைக்குள் இறங்குவதில்லை.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் ஒரு நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது. ஏன் இங்கு வெடிகுண்டு இருக்கிறதா? ஏன் இங்கு ஆளுநருக்கு யாரும் வெடிகுண்டு வைக்கப்போகிறார்களோ? அல்லது நீங்கள் வைக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ?

ஆனால், ஆரிய குள விவகாரத்தில் மாநகர முதல்வைப் பணிய வைக்கிற முயற்சியை தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. நிச்சயமாக ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தள்ளப்படுவோம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பார் என்று கூறுவதைப்போல ஆளுநரும் தற்போது குடை பிடிக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#SrilankaNews

Exit mobile version