சமையல் எரிவாயுக் கலவை மாற்றப்பட்டால்…??? – ஹர்சா டிசில்வா கேள்வி

Harsha de Silva

நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

சமையல் எரிவாயுக் கலவை தொடர்பில் அரசாங்கம் உண்மைக்குப்புறம்பான தகவல்களைக் கூறி வருகிறது. சமையல் எரிவாயுக் கலவை மாற்றப்பட்டால், சிலிண்டரில் உள்ள எரிவாயு வேகமாக முடிவதற்கான அழுத்தம் ஏற்படும்

அரசாங்கம் இலாபத்தைத் தேடி ஒடுகின்றது. மக்களின் மீது கரிசனம் கொள்ளவில்லை. சமையல் எரிவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சரவை புறக்கணித்துவிட்டது

மேலும் பொதுமக்களிற்கு நியாயமான விலைகளில் அரிசியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version