யாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பல்வேறுபட்ட தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இருந்து கடந்த 21 ஆம் திகதியிடப்பட்டு குறித்த கடிதம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேட்பாளர் அங்கஜன் இராமநாதனிடமும் இதுதொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக அவர் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக தென்மராட்சியைப் பிரிப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போது 60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாகப் பிரியும் பட்சத்தில் தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் – தென்மராட்சி மேற்கு பிரதேச செயலகம் என இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளது.
தென்மராட்சி கிழக்கு 28கிராம அலுவலர் பிரிவுகளாகவும், தென்மராட்சி மேற்கு 32கிராம அலுவலர் பிரிவுகளாகவும் பிரித்துக் கடந்த காலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
#SrilankaNews
Leave a comment