அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக Zoom ஊடாகவே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது. தமது வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளதால் கணினியும் தீக்கிரையாகியுள்ளது. எனவே, கூட்டத்தில் பங்கேற்கமுடியாத சூழ்நிலையென ஆளுங்கட்சியின் தெரியப்படுத்தியுள்ளனர்.
இடைக்கால அரசமைப்பது சம்பந்தமாக பேசப்பட்ட வேளையிலேயே மேற்படி இரு கட்சிகளும், ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்க தயாரென அறிவித்துள்ளன.
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையையும் விவாதத்துக்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளது.
#SriLankaNews
Leave a comment