இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அச்சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ண சிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வயது வந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது அவர்களை அடையாளப்படுத்துவதற்கு அவர்களின் தேசிய அடையாள அட்டை பயன்படுகிறது. நம் நாட்டை பொறுத்தவரையில் சிறுவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை .இதனால் தடுப்பூசி வழங்கும் போது அவர்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகின்றது என தெரிவித்தார்.
Leave a comment