அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
தமது பாதுகாப்பின்மை தொடர்பில் தெளிவுபடுத்த அமைச்சர் நாமலுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியிருந்தனர்.
இந்த நிலையில் என்னை சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சு நடத்த அநுராதபுரம் சிறைக்கு இன்று சென்று கலந்துரையாடினேன்.
அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு மறுவாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க நான் உறுதுணையாக இருப்பேன் என நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
இதனை அநுராதபுரம் சிறைக்கு சென்று சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தனது ருவிற்றர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment