அடுத்த வருடத்திற்குள் இரத்தினக்கல் துறையில் 500 மில்லியன் ரூபாவை ஈட்ட தன்னால் முடியும் எனவும், இல்லாவிடின் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இரத்தினக்கற்கள்தொகை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அதன் வருமானம் இன்னும் நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ் வருடம் இரத்தினக்கற்கள் மூலம் 170 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment