அரிசி ஆலை உரிமையாளர்களிடம் அடி பணியமாட்டேன் – மஹிந்தானந்த உறுதி

மஹிந்தானந்த அளுத்கமகே dd

அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நான் அடிபணியவில்லை. இனி அடிபணிய போதுவும் இல்லை.
இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்

நாட்டிலுள்ள வர்த்தக மாபியாக்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவே இருக்கின்றேன்.

அதற்காக அன்று முதல் இன்றுவரை போராடுகின்றேன். எனது போராட்டம் தொடரும்.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நான் துளியளவும் பயம் இல்லை. அவர்களுடன் டீலும் இல்லை. அடிபணியவும் மாட்டேன்.

அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கு விவசாய அமைச்சர் என்ற வகையில் நான் இன்னும் எதிர்ப்பு.

எனினும், அரசி தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதால்தான் இறக்குமதி செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது.

இன்று அரிசி வரும். அதன் பின்னர் சந்தையில் விலை குறையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version