“பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறுவாரெனவும், புதிய பிரதமராக ராஜபக்ச குடும்பத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்படவுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இது தொடர்பில் சிங்கள வார இதழொன்று பிரதமரிடம் வினவியுள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள அவர், பிரதமர் பதவியில் தான் நீடிப்பாரென குறிப்பிட்டுள்ளார்.
” நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கின்றது. அதனை பயன்படுத்தி சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை பரப்பிவருகின்றனர். எனினும், அறிவுள்ள மக்கள் இதனை நம்பமாட்டார்கள்.” – எனவும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment