” அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்.” – இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் இன்னும் அரசிலேயே இருக்கிறேன். விமல், கம்மன்பில போன்றவர்களும் அமைச்சு பதவியிலிருந்து மாத்திரம் தான் நீக்கப்பட்டடுள்ளனர். ஆனால் நாம் அனைவரும் இன்னும் அரசிலேயே இருக்கிறோம்.
நாம் அரசிற்குள் சுயாதீனமாக குழுவாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அதனை அரசிடம் கோருவோம். மாறாக இந்த குப்பை எதிரணியில் சேரமாட்டோம். எதிரிணியின் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் ஒருகாலமும் மக்கள் ஆணையை பெற முடியாது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment