nilavarai 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்த பெருமான் கூறியதால் சிலையை வைத்தேன் – சிப்பாய் வாக்குமூலம்

Share

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் வழிபடுவதற்காக புத்த பெருமானின் சிலையை  வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றடியில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழ்   வெள்ளிக்கிழமை (24) இரவு புத்தரின் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

அது தொடர்பில்  சனிக்கிழமை (25) ஊரவர்கள் அறிந்து அவ்விடத்தில் கூடியதுடன் , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கும் அறிவித்தனர்.

அதனை அடுத்து தவிசாளர் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு இராணுவத்தினர் மற்றும் அச்சுவேலி பொலிஸார் ஆகியோரும் சென்று இருந்தனர்.

பிரதேச சபை தலையீட்டினை அடுத்து, புத்தர் சிலையை இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகற்றினர்.

இந்நிலையில் அவ்விடத்தில் புத்தர் சிலை வைத்தார் என கூறப்பட்ட இராணுவ சிப்பாயியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது ,  புத்த பெருமான் கனவில் வந்து தன்னை வழிபடுமாறு கூறியமையால் , இவ்விடத்தில் புத்தர் சிலையை ​வைத்து வழிபட்டேன் என கூறியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...