tamilni 269 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைக்கவே இல்லை : பொன்சேகா

Share

தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைக்கவே இல்லை : பொன்சேகா

தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. கூறியுள்ளாரே என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விக்னேஸ்வரன் என்பவர் அடிப்படைவாத நோக்கில் அரசியலை முன்னெடுப்பவர். அரசியலில் அவர் முதிர்ச்சியடைந்த நபரும் கிடையாது. வடக்கு, கிழக்கில் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள் உள்ளனர்.

அவர்கள் இவ்வாறு முட்டாள்தனமாகக் கருத்துகளை முன்வைக்கமாட்டார்கள். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கில் எனக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

அதுவும் போர் முடிவடைந்து குறுகிய காலப்பகுதிக்குள். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 85 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

வடக்கு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு இருந்தது. தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது.” என்றார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....