” வியத் மக பெயில் என்ற தகவலை நான்தான் முதலில் வெளியிட்டேன். அதனால்தான் ஓரங்கட்டப்பட்டேன்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
” இந்த அரசில் இருந்தாலும் நான் சுயாதீன நபர்போலவே செயற்படுகின்றேன். வியத்மக பெயில் என்ற தகவலை முதலில் வெளியிட்டேன். ஞானசார தேரரின் நியமனத்தை கண்டித்தேன்.
அதனால் மூன்றாம் வரிசைக்கு தள்ளப்பட்டேன். இன்றைய உரையுடன் என்னை இன்னும் பின்னிலைப்படுத்தலாம். பரவாயில்லை. நான் மக்கள் பக்கம்தான் நிற்பேன்.” – என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment