ஜனாதிபதியின் வெற்றிக்காக நான் உழைக்கவில்லை: இரா. சாணக்கியன்

sanakyan

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியுள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாக வாக்களிப்பதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதற்கு விருப்பமாக உள்ளனர்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

யினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டை பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.

எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க மக்கள் இன்றி, இலங்கையை முன்னேற்றிச் செல்லலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நினைக்கிறார். நான் ஜனாதிபதிக்காக வேலை செய்யவும் இல்லை.

ஜனாதிபதியின் வெற்றிக்காக நான் உழைக்கவும் இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இவ்வாறு நாடாளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.

#SrilankaNews

Exit mobile version