மைத்திரிபால சிறிசேன
அரசியல்இலங்கைசெய்திகள்

நல்லாட்சியில் நான் துப்பாக்கிகளால் பதிலளிக்கவில்லை! – மைத்திரி கடும் கண்டனம்

Share

“எனது தலைமையிலான நல்லாட்சி அரசின் காலத்தில் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை. அதேநேரம் போராட்டக்காரர்களுக்குத் துப்பாக்கிகளால் பதிலளிக்கவும் இல்லை.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“2015ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது முதல் எனது பதவிக்காலம் முடிவடையும் வரையில் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு நான் அனுமதிக்கவில்லை. அதேபோன்று போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கியால் பதிலளிக்கவும் முற்படவில்லை.

நிராயுதபாணிகளுக்குத் தோட்டாக்களை நான் பரிசளிக்கவும் இல்லை. ஆகவே, ரம்புக்கனையில் இன்று இடம்பெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...