நசீர் அஹமட் விடுத்த பகிரங்க சவாலை ஏற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்தே இச்சாவலை ஏற்பதாகத் தெரிவித்தார்.
பட்ஜெட் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை முன்னிறுத்தி, பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து, காணிப் பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews