23 11
இலங்கைசெய்திகள்

மாமியாரை அடித்து கொன்ற மருமகன் – ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்

Share

மாமியாரை அடித்து கொன்ற மருமகன் – ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்

கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.

மேலும் இரு பெண்களை காயப்படுத்தியதாகவும் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதலவத்த, லெவங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பணத் தகராறு தொடர்பாக தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், படுகாயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மனைவியும் மகளும் கூரிய ஆயுதத்தால் காயம்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Shiran Basik
இலங்கை

ஷிரான் பாசிக் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டுபாயில் கைது செய்யப்பட்டு, நேற்று இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட...

Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...