அவிசாவளை பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை –தைகல பகுதியில் நேற்று இரவு இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மதுபோதையில் வருகை தந்த கணவர் நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மனைவி கணவரை பொல்லால் தாக்கியுள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது
இதனையடுத்து மனைவி 8 வயதான மகளை மாமியார் வீட்டில் ஒப்படைத்து விட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கான ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment