22 14
இலங்கைசெய்திகள்

யாழில் மனைவியின் கையை துண்டித்த கணவன்: விசாரணையில் வெளியான பின்னணி

Share

யாழில் மனைவியின் கையை துண்டித்த கணவன்: விசாரணையில் வெளியான பின்னணி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது, “சந்தேகநபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, சந்தேகநபரின் எச்சரிக்கைகளையும் மீறி மனைவி வீட்டின் அறைக்குள் இரகசியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ள நிலையில் அதனை அவதானித்த சந்தேநபர் மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த 41 வயதுடைய பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபரும் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு கையை இழந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதன் படி, மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...