32 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்தவர்களால் தாக்குதல் – யாழில் சம்பவம்

Share

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது சாணித்தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அருண் சித்தார்த் எனும் நபரின் தலைமையில் வந்த பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நல்லூர் பகுதியில் உள்ள லக்ஸ் ஹோட்டலுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அருண் சித்தார்த் எனும் நபரின் தலைமையில் 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் கார் ஒன்றில் வந்து இறங்கி, ஹோட்டல் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து ஹோட்டல் உரிமையாளர் மீது சாணித்தண்ணி ஊற்றி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் , ஹோட்டல் கண்காணிப்பு கமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

32 3

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...