போராட்டத்தால் ஸ்தம்பிதமடைந்தது வைத்தியசாலைகள்!

சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

வடக்கில் வைத்தியசாலைகளில் அவசர மற்றும் உயிர்காப்பு சிகிச்சைகளுக்கு மாத்திரம் சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்பட்டதுடன் மேலதிக விடயங்களில் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

Jaffna hospital 2

இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்து விநியோகப் பிரிவு என்பன செயலிழந்து காணப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version