யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் நீண்ட கால மருத்துவக் கழிவுகளே இப்பகுதியில் தீயிட்டு கொழுத்தப்படுவதாக மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
மக்களின் முறைப்பாட்டின் பெயரில் மாநகர சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சுகாதாரத் துறையினர், ஆதாரங்களைத் திரட்டியதோடு, இது தொடர்பில் உடன் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த வைத்தியசாலைக்கு ஏற்கனவே பல தடவை அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் மீண்டும் இவ்வாறான ஒரு செயல் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் உடனடியாக சுற்றுச் சூழலிற்கு பொறுப்பான பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டது.
#SrilankaNews