யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவத்தால் காட்டுமிராண்டித் தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் நினைவேந்தல் நிகழ்வு வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் திருவுருவப் படங்களுக்கு உறவினர்களால் மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Leave a comment