மாவீரர் நாள் தடை – வழக்கைத் தள்ளுபடி செய்தது ஊர்காவற்துறை நீதிமன்றம்

FB IMG 1637650751317

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று(23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிசார் 5 நபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிசார் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மனுவை தாக்கல் செய்தனர்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட சிலர் ஆஜராகி தடை உத்தரவை பிறப்பிக்க கூடாதென வாதம் செய்தனர்.

இதனை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version