ஒற்றையாட்சியைத் தடுத்து சமஷ்டித் தீர்வுக்கு உதவுங்கள்! – ஜெய்சங்கருக்கு முன்னணி கடிதம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இந்திய வெளிவிவாகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி அரசமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசமைப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் இந்தக் கடிதத்துடன், கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version