Facebook 1667905077239 e1667924997732
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குழந்தையை கண்டுபிடித்து மீட்க உதவுங்கள்!!

Share

ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கை சேர்ந்த சிவச்சந்திரன் நிறோஜினி என்ற வாய் பேச முடியாத இளம் பெண் சுருவிலை சேர்ந்த நந்தகுமார் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து அதன் மூலம் பிறந்த குழந்தையே மதுமிதா (வயது 04).

கணவனை பிரிந்து இருந்த நிறோஜினி ஒரு மாதத்திற்கு முன்னரே கணவனால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் தற்போது மரணமடைந்திருப்பதாகவும் அவரது குழந்தை கொடும் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும் படங்களும் காணொளிகளும் வெளியாகி உள்ளன.

ஆனால், இவை எங்கே எப்போது இடம்பெற்றன என்ற விபரங்கள் தெரியவரவில்லை.

இது தொடர்பாக இன்று (08) பகல் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊர்காவற்றுறை நீதிவானின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ கிராம சேவையாளர்களுக்கோ தகவல்களைக் கொடுத்து இக்குழந்தையை மீட்க உதவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...