தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடக பெறப்பட்டு மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 152மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த தகவலை யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்தார்.
தெல்லிப்பழையில் 152 மில்லி லீற்றர், அச்சுவேலியில் 99.4மில்லி லீற்றர், யாழ்ப்பாணம் 69.4மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews

