tamilni 282 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை

Share

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக நீர், இளநீர், தேசிக்காய் சாறு, தோடம்பழம், மாதுளம்பழம், ஜீவனி போன்ற நீராகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்குமாறும் பெற்றோர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி விதானப்பத்திரண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வறட்சியினால் நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 75,287 பேர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...