2 4 scaled
இலங்கைசெய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவன தலைவர்கள்

Share

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவன தலைவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அடுத்த வாரம் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள், உள்ளுர் கண்காணிப்பு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக நாளை மறுதினம் (3) சனிக்கிழமை அனைத்து தேர்தல் அதிகாரிகள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் ராஜகிரிய தேர்தல் செயலாளர் அலுவலகத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.

தேர்தலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து பாதுகாப்பு திணைக்கள தலைவர்களுடனும் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...