WhatsApp Image 2022 07 04 at 1.45.28 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹட்டன் ஐ.ஓ.சீ எரிபொருள் நிலையத்தில் முறுகல் நிலை!

Share

ஹட்டன் ஐ.ஓ.சீ பெற்றோல் நிரப்பும் நிலையத்தில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவும், ஒரு சிலர் வரிசையில் வராது பெற்றோல் பெற்றுக்கொள்ள முற்பட்டதன் காரணமாகவும் இந்த முறுகல் நிலை ஏற்பட்டது.

ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சீ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு, ஒரு வாரத்துக்குப் பின்னர். இன்று (04) அதிகாலை இரண்டு மணியளவில் பெற்றோல் பௌசர் வந்தது. அதிலிருந்து இறக்கப்பட்ட எரிபொருளே, விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து ஹட்டன் நகரில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

பெற்றோல் நிரப்புவதற்கு கடந்த இரண்டு, மூன்று நாட்கள் காத்திருப்பவர்களுடன் இன்று கேள்வியுற்ற பலர் எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்தமையினால் அட்டன் பிரதான வீதி, அட்டன் சுற்றுவட்ட வீதி, டன்பார் வீதி, உள்ளிட்ட பல வீதிகளில் வாகன நெரிசல் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

WhatsApp Image 2022 07 04 at 1.45.28 PM 1 WhatsApp Image 2022 07 04 at 1.45.28 PM 2 WhatsApp Image 2022 07 04 at 1.45.28 PM 3

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...