tamilni 84 scaled
இலங்கைசெய்திகள்

குற்ற விசாரணைப்பிரிவின் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் அதிருப்தி

Share

குற்ற விசாரணைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் குறித்தே அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் திருப்திக்கொள்ள முடியாது என அவர் விசாரணை அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் நிலைமையை அறிந்துக்கொள்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று குற்ற விசாரணைப்பிரிவிற்கு திடீரென சென்றுள்ளார்.

விசாரணைகள் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதனால் மேலும் மூன்று பொலிஸ் குழுக்களை பதில் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளுக்காக நியமித்துள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த யுக்தி என்னும் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரக் கட்டாவிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் ஹரக் கட்டா சுமார் 4000 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஹரக் கட்டாவிற்கு எதிராக எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் வழக்கும் தாக்கல் செய்யப்படாமை ஆச்சரியமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...