சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு கொண்டாடும் திருநாளே இப் பொங்கல் திருநாள்.
தை பிறந்தால், வழி பிறக்கும் என்ற கூற்றிற்கிணங்க, அனைவரது வாழ்விலும், இன்பங்கள் பிறக்கட்டும், துன்பங்கள் தொலையட்டும்.
சாதி மத பேதங்களைக் கடந்து இயற்கைக்கு நன்றி நவிலும் நாளாயிருக்கும் இந்த பொங்கல் திருநாளில் சூரியனைக் கண்டால் விலகும் பனிபோல் துன்பங்களும் துயரங்களும் இன பேதங்களும் விலகட்டும். வாழ்வில் ஒளிபிறக்கட்டும்.
தமிழ்நாடியின் வாசகர்களுக்கு இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!
#HappyPongal
Leave a comment