பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே!

vaiko 1

பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

“ஈழ விடுதலைப் போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை” என்றார் வைகோ.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தனக்கு வந்தத் தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews #India

Exit mobile version