கொரானாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான விசேட பிரேதப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாட்டில் இவை வழங்கப்பட்டுள்ளன.
விசேடமாக தயாரிக்கப்பட்ட 14 பிரேதப் பெட்டிகள் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் புத்தளம் மாவட்டப் பணிப்பாளர் முஜாஹித் நிஸார் உள்ளிட்ட குழுவினரால் பெரிய பள்ளி பரிபாலன சபையினரிடம் குறித்த பிரேத பெட்டிகள் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a comment