இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து யாத்திரிகர்களை மக்காவுக்கு அனுப்பாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாத்திரிகர்களை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என அமைச்சில் நடைபெற்ற பேச்சின்போது பிரதான முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இம்முறை யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.
இந்தத் தீர்மானம் நேற்று சவூதி அரசுக்கு அறிவிக்கப்பட்டது எனத் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.
#SriLankaNews