சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கன்ரர் ரக வாகனம் விபத்து!!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கன்ரர் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும், வாகனத்தை நிறுத்தாது சாரதி தொடர்ச்சியாக பயணித்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

Accident 002

அதில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை கைப்பற்றிய பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்று அதிகாலை குடத்தனை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

#SrilankaNews

Exit mobile version