15 6
இலங்கைசெய்திகள்

சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Share

சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்றை சோதனையிட்ட போது வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தவர், பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது துப்பாக்கி இயங்கியதில் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இருவரும் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் வாகனத்தின் பின் இருக்கையில் பயணம் செய்த 38 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...