Rasi palan new10 1 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் ஏற்பட்ட மோதல்

Share

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் ஏற்பட்ட மோதல்

கொழும்பில் இருந்து பயணித்த ரயிலில் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கம்பஹா வரை ரயிலில் பயணித்த யுவதிக்கு கோட்டை நிலையத்தில் இருந்து ஹுனுப்பிட்டிக்கு மட்டும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கம்பஹாவில் வைத்து அவரை சோதனையிட்ட பரிசோதகர்கள் அபராதம் என கூறி அவரிடம் கட்டணம் வசூலிக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு யுவதியின் சகோதரர் ஒருவரும், பயணச்சீட்டு பரிசோதகர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மோதலில் காயமடைந்தவர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...