கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்..
கொழும்பு குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சந்தேகநபர் குருநாகல், மஹவ பகுதியில் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதாகியிருந்தார். இந்த நிலையில் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அமைச்சர் ஒருவருடைய வீட்டில் இருந்தே குறித்த கைக்குண்டை கொண்டுவந்தேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment