நாட்டில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் 53 ஆயிரம் பேரை எதிர்வரும் 3 மாதங்களுக்கு அரச நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இவ்வாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயிலுநர்களாக இணைக்கப்பட்ட 53 ஆயிரம் பட்டதாரிகள் எதிர்வரும் மூன்று மாதங்களுள் அரச நிறுவனங்களுள் இணைக்கப்படவுள்ளனர்.
இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் உரிய பகுதியின் கவனத்துக்கு கொண்டுவரலாம்.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கும் பொறுப்பை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார் – என டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment