தரம் 10,11,12 வகுப்புக்கள் நவம்பர் 8இல் ஆரம்பம்

uio

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் வரையான வகுப்புக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணியின் பரிந்துரைக்கமைய இந்தத் தீர்மானத்தை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நவம்பர் 16ஆம் திகதி முதல் 50 வீத மாணவர் கொள்ளளவில் நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சுகாதார வழிகாட்டுக்கல்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க தயாராக உள்ளோம் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#srilanka

Exit mobile version