நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகள் தற்போது பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும், வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்ட கற்றல் செயற்பாடுகளை இவ் வருட முடிவுக்குள் முழுமையாக நிறைவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் ஆண்டுக்கான தவணை இறுதி பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாத இறுதி வரை பிற்போடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிர்வாகத்தால், கல்வி அமைச்சுக்கு இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் கலந்துரையாடி தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment