நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
12 முதல் 19 வயதிற்குட்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சகலருக்கு தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை,பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment