sumanthiran scaled
இலங்கைசெய்திகள்

பொறுப்புக்கூறலில் அரசு இரட்டை வேடம்! – சுமந்திரன்

Share

அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்க சென்ற ஜனாதிபதி ஐ.நா. சபை பொதுச் செயலாளரை சந்தித்தபோது ஒரு கருத்தை கூறுகின்றார். அதற்கு வெளிவிவகார அமைச்சு வேறு ஒரு காரணிகளை கூறுகிறது.

இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளக செயற்பாடுகளில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். மனித உரிமையை பலப்படுத்த இணைந்து செயற்படுவோர் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா.வுடன் இணைந்து கடமையாற்றுவோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரச்சினைகளை தீர்க்க நாம் தயார் நிலையில் உள்ளோம். இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. உள்ளக பிரச்சினையை தீர்க்க வெளியக பொறிமுறை எதற்கு? எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் ஏற்கமாட்டோம் எனக் கூறியுள்ளது.

இக் கருத்துக்களின் அடிப்படையில் அரசு இந்த விடயத்தில் இரட்டை நாடகம் போடுவைத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...