LakshmanKiriella
இலங்கைஅரசியல்செய்திகள்

கோட்டாவின் விளக்க உரை ஏற்புடையதல்ல- ஐ.ம.ச விசனம்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை ஏற்புடையதாக இல்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகளுக்கு உரம் இல்லை. எரிபொருள் தொடர்பிலும் நெருக்கடி நிலை தொடர்கின்றது. மக்களின் வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது.

இவற்றுக்கு என்ன தீர்வு என்பதையே ஜனாதிபதி உரைமூலம் எதிர்ப்பார்த்தோம். ஆனால் நடப்பு விவகாரங்களை ஜனாதிபதி கருத்திற்கொள்ளவில்லை. அந்தவகையில் அவரின் கொள்கை விளக்க உரையும் தோல்வி. நாம் ஆதரவு வழங்கமுடியாது.

எல்லா விடயங்களுக்கும் கொரோனாமீது பழிசுமத்த முடியாது. கொரோனாவுக்கு மத்தியிலும் எமது அயல் நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.

முறையற்ற நிர்வாகத்தால் தான் நாம் முன்னேறாமல் உள்ளோம்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...