அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு திரும்ப மறுக்கும் கோட்டா! – சிங்கப்பூர் விசா மேலும் நீடிப்பு

Share
gotta
Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் இரண்டு வாரங்கள் சிங்கப்பூரில் தங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவிவிலகக் கோரி நாட்டில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.

இந்தநிலையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி நாட்டில் தலைமறைவாகவிருந்த கோட்டாபய ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

மாலைதீவு சென்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

சாதாரண நபருக்கு வழங்கப்பட்டுள்ள 14 நாட்களுக்கான விசாவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவருக்கு சலுகைகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

இதன்படி கடந்த 28ஆம் திகதி குறித்த விசா முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான விசா சிங்கப்பூர் அரசால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் விசாவை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோரிக்கை இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், இந்த கோரிக்கைக்கு இணங்க அவருக்கு விசா நீடிக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கு சரியான தருணம் இதுவல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...