“கோட்டா கோ கம”வில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கூடாரங்கள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, காலி முகத்திடலில் பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு முன்னர், குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment